வெள்ளி, 22 மே, 2009

குடும்பத்துல சந்தோசம் வேணுமா ?

இரு தினங்களுக்கு முன்பு சன் செய்திகளின் இடையில் ஒளிபரப்பாகும் "சொன்னது யார்?" பகுதியில் வந்த செய்தி.


"குடும்பத்தில் அமைதி ஏற்பட வேண்டுமெனில் கணவன் மனைவியின் பேச்சை அப்படியே கேட்க வேண்டும். மனைவி கூறுவது முட்டாள்தனமாக கணவனுக்கு தோன்றினாலும் அதை அப்படியே செய்ய வேண்டும்."


இப்படிக் கூறியது மரியாதைக்குரிய உச்ச நீதி மன்ற நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு அவர்கள். இதை படித்ததும் எனக்குக் கிடைத்த ஒரு மின்னஞ்சல்தான் நினைவுக்கு வந்தது. அதன் தமிழாக்கத்தை இங்கு நான் உங்களுக்குத் தருகிறேன்.


நான் : மச்சான்! , நீ மட்டும் எப்படிடா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கே ?


நண்பன் : மச்சான்! பொண்டாட்டி கிட்டே அன்பா மட்டும் இருந்தா மட்டும் போதாது. கொஞ்சம் குடும்பப் பொறுப்பையும் அவகிட்டே இருந்து பங்கு போட்டுக்கணும்.


நான் : மச்சான்! கொஞ்சம் புரியும்படி சொல்லேண்டா...


நண்பன் : கண்ணா, எங்க வீட்ல, பெரிய விஷயம், பெரிய பிரச்சனை எதாவது வந்தா, நாந்தான் முடிவு எடுப்பேன். அதேமாதிரி, சின்ன சின்ன விஷயம், பிரச்சனை வந்தா, என் பொண்டாட்டி தன் முடிவு எடுப்பா.


நான் : மச்சான்! பொறுமையா சோதிக்காதே, கொஞ்சம் விளக்கமா சொல்றியா?


நண்பன் : விஷயம் இவ்வளவுதான் மச்சி, என் பொண்டாட்டி, மாசத்துக்கு எவ்வளவு செலவு செய்யணும், எவ்வளவு சேத்து வைக்கணும், என்ன மாதிரியான கார் வாங்கனும், எப்போ ஊருக்கு போகணும், எந்த மாதிரி, சோபா செட், A/C, Fridge வாங்கனும், வேலைக்காரி வேணுமா வேண்டாமா?, இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் முடிவு செய்வா. நானும் அதை அப்படியே ஒத்துக்குவேன்.


நான் : அப்போ, நீ எந்த மாதிரி முடிவு எடுப்பே?


நண்பன் : அமெரிக்கா ஈரான் மேல போர் தொடுக்குமா? , டெண்டுல்கர் கிரிக்கெட் - இருந்து retire ஆகலாமா வேண்டாமா?, மன்மோகன் சிங் ,பாலுவுக்கு அமைச்சர் பதவி தரலாமா வேண்டாமா?, எத்தனை காபினெட் அமைச்சர் பதவி, தி.மு.. வுக்கு தரனும்.....இந்த மாதிரி விஷயமெல்லாம் நான் முடிவு எடுப்பேன், என் பொண்டாட்டி அப்படியே ஒத்துக்குவா


நான் : ?!?!*@#*@!!!


அது சரி, உங்க வீட்ல எப்படி அண்ணே !!!


வந்தது வந்துடீங்க. எப்படி இருந்திச்சின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. அப்படியே முடிஞ்சா ,வாக்குகளை நியூஸ் பானை மற்றும் "tamilish.காம்"-இலும் குத்துங்க. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.

5 கருத்துகள்:

  1. அண்ணே ஸாரி மதுரை கார தம்பி ;)

    ரொம்ப அழகான எழுத்து நடை வாருங்கள் பதிவுலகத்துக்கு, ஏதாச்சும் உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் ( பதிவுலக சம்பதமாய் )

    பதிலளிநீக்கு
  2. என்னங்க என்னை எழுதவைத்தவர்கள் பெயர் லிஸ்டில் பெரிய தலைகளுடன் என்னை சேர்த்து போட்டு இருக்கிங்க :-0 நான் எல்லாம் சின்ன பையன் பதிவுலகத்தில்

    நீங்க நல்லா வர என் வாழ்த்துகள் நண்பா

    பதிலளிநீக்கு
  3. "/என்னங்க என்னை எழுதவைத்தவர்கள் பெயர் லிஸ்டில் பெரிய தலைகளுடன் என்னை சேர்த்து போட்டு இருக்கிங்க :-0 நான் எல்லாம் சின்ன பையன் பதிவுலகத்தில்

    நீங்க நல்லா வர என் வாழ்த்துகள் நண்பா/"

    ரொம்ப நன்றி!! உங்க கருத்துக்கும் உங்க வாழ்த்துக்களுக்கும்!!!
    இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம் ஜாஸ்தி!!!
    மதுரைக்காரதம்பி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா26 மே, 2009 அன்று PM 6:36

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு